SELANGOR

ஒன்பது மாவட்டங்களில் மாபெரும் சாலை மேம்பாட்டு பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது

31 அக்டோபர் 2023, 7:59 AM
ஒன்பது மாவட்டங்களில் மாபெரும் சாலை மேம்பாட்டு பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது

ஷா ஆலம், அக்.31: ஒன்பது மாவட்டங்களில் மாபெரும் சாலை மேம்பாட்டு பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சிலாங்கூர் முழுவதும் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக சாலை மேம்பாட்டு பணி 94.9 கிலோமீட்டர் தொலைவில் 118 திட்டங்களை உள்ளடக்கியதாக இஷாம் ஹாஷிம் கூறினார்.

"இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் காலநிலை போன்ற பல காரணங்களால் சிறிது தாமதமானாலும் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

"இப்போது நாங்கள் இரண்டாவது கட்டத்திற்கான சோலார் விளக்குகளை நிறுவுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சில தொகுதிகளில் கூடுதல் சோலார் விளக்குகளை சேர்க்க தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் இஷாம் தெரிவித்தார்.

"இதுவரை, குடியிருப்பாளர்கள் இடமிருந்து பெறப்பட்ட கருத்து நேர்மறையாக உள்ளன. மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் சோலார் விளக்குகளை அதிகரிக்க வேண்டிய சில பகுதிகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

"சோலார் விளக்குகளை நிறுவுவதற்கான அவசரத் தேவை இருந்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்," என்று அவர் விளக்கினார்.

இத்திட்டம் RM50 மில்லியன் ஒதுக்கீட்டில் பயனர்களின் பாதுகாப்பிற்காக மாநிலச் சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதாகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ட்விட்டர் அல்லது இன்ஃப்ராசெல் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்ததன் அடிப்படையில், பழுது பார்க்கப்பட வேண்டிய சாலைகளைத் தேர்வு செய்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.