SELANGOR

எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும்

31 அக்டோபர் 2023, 7:57 AM
எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும்

ஷா ஆலம், அக். 31: சிலாங்கூர் வேளாண்மை மேம் பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (ஜேஇஆர்) அடுத்த ஆண்டும் தொடரும் குறிப்பாக இது பண்டிகைக் காலத்தில் ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மாநில நிர்வாகம் RM10 மில்லியன் செலவில் மக்களின், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரின் (B40) சுமையைக் குறைக்க இந்த மலிவு விற்பனையைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது என்று விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

இந்த விற்பனை மூலம் இதுவரை சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். இறால் போன்ற உறைந்த உணவுகளுடன் கூடுதலாகக் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்ப்பது மூலம் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

நாளையுடன் அமுலுக்கு வரும் உற்பத்திக்கான விலை மானியம் நிறுத்தப்பட்ட போதிலும், விற்பனையில் வழங்கப்படும் பொருட்களின் விலையும், குறிப்பாகக் கோழி விலையும் பேணப் படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.