SELANGOR

700 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்

30 அக்டோபர் 2023, 9:21 AM
700 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்

கோம்பாக், அக் 30: நேற்று நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத்தின் மக்கள் நல நிகழ்ச்சியில் மொத்தம் 700 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU) RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.

500 ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் 200 ஸ்கீம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா வவுச்சர்களைத் தனது தரப்பு விநியோகித்துள்ளது என யாயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூரின் (யாவாஸ்) திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமட் ரஃபியுடின் சாருடின் கூறினார்.

“RM150 மதிப்புள்ள வவுச்சர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாநில அரசின் அன்பளிப்பாகும்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் ஷாப்பிங் செய்ய அவர்களை ஊக்குவிப்பதற்காக பிறந்தநாள் பரிசாக வழங்கிய RM100 உடன் ஒப்பிடும்போது இந்த மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முதியோருக்கான வவுச்சர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்ட சுமையைக் குறைக்கின்றன என்று 46 வயதான தனியார் தொழிலாளி ராஜா ஜாஸ்லான் ராஜா ஷஹ்ரின் தெரிவித்தார்.

மேலும், அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் வவுச்சரைப் பெற்றதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் 73 வயதான ஆர் மணி என்பவர்.

"என்னைப் போன்ற முதியவர்களின் சுமையைக் குறைக்க இந்த வவுச்சரை வழங்கிய மாநில அரசின் அக்கறையை நான் மிகவும் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் ஜோம் ஷாப்பிங் வவுச்சர் திட்டத்திற்கு RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், 82,400 பெறுநர்கள் பயன்பெறுவர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.