SELANGOR

பிகே என்எஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சொத்து வாங்குபவர்கள் சாம்சுங் பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்களுக்குத் தள்ளுபடி பெறுவர்

30 அக்டோபர் 2023, 9:11 AM
பிகே என்எஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சொத்து வாங்குபவர்கள் சாம்சுங் பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்களுக்குத் தள்ளுபடி பெறுவர்

ஷா ஆலம், அக் 30: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சொத்து வாங்குபவர்கள் சாம்சுங் பிராண்ட் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 46 சதவீதம் வரை தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது.

பிகேஎன்எஸ் மேம்பாட்டு திட்டத்தை ஆதரிப்பவர்களை பாராட்டும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிரத்யேக தள்ளுபடி சலுகை தொடங்கப்பட்டதாக அதன் தலைமை செயல் அதிகாரி டத்தோ மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.

“சொத்து வாங்குபவர்கள் சொந்த வீடு மட்டுமல்ல, சிறந்த தரம் வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்ட சாம்சுங் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

"இந்தச் சலுகையானது தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரம் போன்ற உபகரணங்களை வாங்க உதவுகிறது. இதன் மூலம், பணத்தை மிச்சப்படுத்த முடியும். ஏனெனில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபோகும் போது நிறைய பணத்தைச் செலவு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

பிகேஎன்எஸ் வீடு வாங்குபவர்கள் இந்தச் சலுகையைப் பற்றி மேலும் அறிய www.pknshomebuyers.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.