ஷா ஆலம், அக் 27- பாங்கி நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள 500 குறைந்த
வருமானம் பெறும் பி40 தரப்பு மாணவர்களுக்கு பள்ளி உதவி நிதி
வழங்கப்படும்.
ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தகுதி உள்ள
மாணவர்கள் 100 வெள்ளி உதவி நிதியைப் பெறுவதற்கு bit.ly/persekolahanBangi
என்ற அப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாரெட்ஸான் ஜோஹான் கூறினார்.
விண்ணப்பதாரர்கள் மாதம் 4,850 வெள்ளிக்கும் குறைவாக வருமானம்
பெறக்கூடிய பி40 குடுமபங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
என்பதோடு பெற்றோர் பாங்கி தொகுதியில் வசிப்பவர்களாகவும் தொகுதி
வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று
அவர் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தின் சார்பாக இரு விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்
கொள்ளப்படும். தேவைப்படும் ஆவணங்களையும் விண்ணப்பத்துடன்
இணைத்திருக்க வேண்டும் என அவர் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களைத் தொகுதி சேவை மையம்
தொடர்பு கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.








