SELANGOR

எம்.பி.கே.எஸ். ஏற்பாட்டில் பெத்தாங் விளையாட்டுப் போட்டி- வெ.5,400  ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

26 அக்டோபர் 2023, 8:45 AM
எம்.பி.கே.எஸ். ஏற்பாட்டில் பெத்தாங் விளையாட்டுப் போட்டி- வெ.5,400  ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், அக் 26 - இளையோருக்கான பெத்தாங் போட்டியை  கோலசிலாங்கூர் நகராண்மைக் கழகம்  (எம்பி.கே.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி வரும்  நவம்பர் 11 ஆம் தேதி கோல சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தின் அரேனா பெத்தாங்கில் நடைபெறும்.

இந்த எம்.பி.கே.எஸ். தலைவர் கிண்ண தனிநபர் உள்ளரங்குப் போட்டியில் வெற்றியாளர்கள் மொத்தம் 5,400 வெள்ளியை பரிசாக வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாக நகராண்மைக் கழகம் கூறியது.

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கிலான இப்போட்டியில் 20 வயதுக்கும் குறைவான 128 ஆண்களும் 64 பெண்களும் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

முதல் பிரிவில் வெற்றி பெறுபவர் 800 வெள்ளியையும்  இரண்டாம் இடம் பெறுபவர் 500 வெள்ளியையும் மற்றும் மூன்றாவது இடத்தைப் பெறுபவர் 300  வெள்ளியையும் பரிசாகப் பெறுவார் என நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது முதல் எட்டாவது இடம் வரை பெறும் விளையாட்டாளர்களுக்கு தலா 100 வெள்ளியும்   9 முதல் 16வது இடத்தைப் பெறுவோருக்கு தலா 50 வெள்ளியும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் நுழைவுக் கட்டணமாக  30  வெள்ளி செலுத்த வேண்டும். போட்டியின் பதிவுக்கான  இறுதி நாள்  நவம்பர் 8ஆம் தேதியாகும். மேல்  விபரங்களுக்கு 013-3378163 என்ற எண்ணில் முவாஸைத் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.