ஷா ஆலம், அக் 25 - ஷா ஆலம் மாநகராட்சி தனது சமூக விசுவாச வெகுமதித் திட்டத்தைத் தொடங்கிய நாட்டின் முதல் உள்ளாட்சி மன்றமாகத் திகழ்கிறது.
``MyMBSA`` கைப்பேசி செயலி வழியாக அணுகக்கூடிய E-Loyalty அமைப்பு, பிரத்யேக நினைவுப் பொருட்களைப் பெற பொதுமக்கள் தாங்கள் திரட்டிய புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று அதன் துணை மேயர் செரெமி தர்மன் கூறினார்.
“ஷா ஆலம் மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்று அதன் சேவைகளைப் பயன்படுத்தி வரும் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எங்கள் நன்றியைக் காட்டவே இந்தத் திட்டம்.
“பொதுமக்கள் கலந்துகொண்ட நிகழ்வின் வகையைப் பொறுத்து வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். கூடுதலாக, அவர்கள் வரி, பிரமிட் மற்றும் பிற பில்களை செலுத்துவதற்கு செலவழிக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டுக்கும் ஒரு புள்ளியைப் பெறுவார்கள்,” என்று அவர் விளக்கினார்.
சென்ட்ரல் ஐ-சிட்டி ஷாப்பிங் சென்டரில், நகரின் 23வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘ஹரி மெஸ்ரா எம்பிஎஸ்ஏ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செரெமி இவ்வாறு கூறினார்.
பொது மக்கள் www.mymbsa.gov.my/eloyalti ஐப் பார்வையிடலாம், அவை எம்பிஎஸ்ஏ பொருட்களை மீட்டெடுப்பதற்கும், லாயல்டி புள்ளிகளுக்குத் தகுதிபெறும் பொருட்களைக் கண்டறியவதற்கும், அத்துடன் புள்ளி சேகரிப்புக்காக வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவலைப் பெறுவதற்கும் உதவும்.
MyMBSA செயலியை Apple Store மற்றும் Google Play Store இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். வெற்றிகரமான பதிவு மூலம், பயனர்கள் தானாகவே 50 வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள்.








