SELANGOR

பொருளாதார மேம்பாட்டுக்கு எரிசக்தித் துறையை மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது

25 அக்டோபர் 2023, 4:04 AM
பொருளாதார மேம்பாட்டுக்கு எரிசக்தித் துறையை மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது

ஷா ஆலம், அக் 25: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் கிள்ளான்  புலாவ் இண்டா, மின் உற்பத்தி நிலையம் உட்பட பொருளாதாரத்தை  மேம்படுத்த எரிசக்தித் துறையை மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

ஜெராம், கோலா சிலாங்கூரில் கழிவுகளை மறுபயனீடு  தொழில்நுட்ப நிறுவனம்  (WTE) ஆலையை நிர்மாணிப்பது டன், சோலார் மற்றும் மினி-ஹைட்ரோ எலக்ட்ரிக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாற்று ஆற்றலையும் தனது தரப்பு உருவாக்குகிறது என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"நாங்கள் ஏற்கனவே ஜெராமில் WTE ஐ மூலம்  கழிவுகளை மறுபயனீடு  தொழில்நுட்பத்தின் வழி  மின் சக்தி உருவாக்கும் பணியில் உள்ளோம். மேலும் தஞ்சோங் 12 (கோலா லங்காட்)லிலும் அதனை உருவாக்குவோம். சில ஆண்டுகளில் மற்ற தரப்புகளும் கழிவுகளை மறுபயனிடு வழி மின் உற்பத்தியில்   இறங்க  ஆர்வம் காட்டுவர்.

"சில ஆண்டுகளில் இந்த மாநில மக்களால் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படும் 7,000 முதல் 8,000 டன் கழிவுகளை நிர்வகிக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை, மேலும் இந்த கழிவுகள் மறு பயனீடு வழி மின்சாரமாகும்,  அவை குப்பைக் கிடங்குகளில் அகற்றப் படாது" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடனான அமர்வில் அவர் இவ்வாறு பேசினார், அதில் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸும் கலந்து கொண்டார்.

2026 ல் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆலை அதிக பொருளாதார வாய்ப்புகளைத் தூண்டுவதோடு, நாளொன்றுக்கு 3,000 டன் திடக்கழிவுகளைச் செயலாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கழிவு-ஆற்றலால் கழிவுகளை திறமையாக நிர்வகிக்க முடியும், இதனால் துர்நாற்றம் மாசுபாடு, கசிவு அல்லது தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றம் ஆகியவை குறையும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.