ஷா ஆலம், அக் 24: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
நாளை ஷா ஆலம், தாமான் புக்கிட் சுபாங். அபார்ட்மெண்ட் தெராத்தாய் பிளாக் 1, (கோத்த அங்கேரிக் தொகுதி), ரவாங், அபார்மெண்ட் பல்மா (ரவாங் தொகுதி ) மற்றும் கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் (பண்டாமாரான் தொகுதி )ஆகிய இடங்களில் விற்பனை நடைபெறும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) 2850 ம் மேற்பட்ட
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்கு சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தை செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.








