SELANGOR

கிளாங் ஜி.எம். பேரங்காடி ஏற்பாட்டில் “பிரமிப்பூட்டும்“ தீபாவளி பெருவிழா

20 அக்டோபர் 2023, 3:28 AM
கிளாங் ஜி.எம். பேரங்காடி ஏற்பாட்டில் “பிரமிப்பூட்டும்“ தீபாவளி பெருவிழா

கோலாலம்பூர், அக் 20- தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி

கொண்டாடப்பவுள்ள வேளையில் கிள்ளான் நகரின் பிரசித்தி பெற்ற

மொத்த விற்பனை மையமான கிளாங் ஜி.எம். “பிரமிப்பூட்டும் தீபாவளி

பிரசாரம் 2023“ எனும் நிகழ்வை நடத்தவுள்ளது.

விளக்குகளின் விழா எனப்படும் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

நவம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பல்வேறு

அங்கங்களுடன் இந்த விற்பனை விழா நடத்தப்படும் என்று ஜி.எம். கிளாங்

பேராங்காடி அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த விற்பனை விழாவை முன்னிட்டு மருதாணி இடுதல், ரங்கோலி

கோலம், பொருள் வாங்கி பரிசு பெறும் இயக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. பொருள் வாங்கி பரிசு

பெறும் திட்டத்தின் கீழ் 200 வெள்ளி மற்றும் அதற்கும் மேல் பொருள்களை

வாங்குவோர் அதிர்ஷ்டக் குலுக்கின் வாயிலாக கவர்ச்சிகரமான

பரிசுகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர் என்று அந்த

அறிக்கை குறிப்பிட்டது.

தீபாவளிப் பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடினாலும், அந்த

பெருநாள் மகிழ்ச்சியை ஜி.எம். கிளாங் மொத்த விற்பனை மையத்திற்கு

வரும் இதர இன மக்களும் அனுபவிக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த

நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அப்பேரங்காடி மேலும்

தெரிவித்தது.

ஒரே கூரையின் கீழ் பல்வேறு விதமான பொருள்களை விற்கப்படும்

காரணத்தால் இந்த ஜி.எம். கிளாங் பேரங்காடி பொதுமக்களின்

தேர்வுக்குரிய இடமாக விளங்குவதாக அந்நிறுவனத்தின் வர்த்தக

தொடர்புப் பிரிவு தலைமை நிர்வாகி நுர்சுஹைடா ஓத்மான் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.