SELANGOR

சிறகு திருவிழாவை கண்டு மகிழப் பொதுமக்களுக்கு அழைப்பு - கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

19 அக்டோபர் 2023, 4:39 AM
சிறகு திருவிழாவை கண்டு மகிழப் பொதுமக்களுக்கு அழைப்பு - கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், அக் 19: இந்த வார இறுதியில் தாமான் ஆலம், கோலா சிலாங்கூரில் ஏற்பாடு செய்துள்ள சிறகு திருவிழாவைக் கண்டு மகிழுமாறு பொதுமக்களுக்குக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி காலை 8 மணி அளவில் தொடங்கும்.

இந்த நிகழ்வு பறவைகள், சதுப்புநில நிலக் காடுகள் மற்றும் ஈரநில வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்து சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படும்.

"பொதுமக்கள், குறிப்பாக இயற்கை ஆர்வலர்கள், பல்வேறு வகையான பறவைகளின் தனித்துவத்தைக் காண இந்த திருவிழாவிற்கு வருகை தருமாறு அழைக்கப்படுகிறார்கள்" என்று எம்.பி.கே.எஸ் தெரிவித்தது.

வெளிநாட்டிலிருந்து கோலா சிலாங்கூருக்குப் பறவைகள் இடம் பெயர்வதைக் காண பார்வையாளர்கள் தொலைநோக்கி மற்றும் கேமராக்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், சதுப்பு நில மரம் நடுதல், 'சதுப்பு நிலத்தை சுத்தம் செய்தல்', சதுப்புநில விதை நடுதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறும்.

அதுமட்டுமில்லாமல், ஓவியம் வரையும் போட்டி, கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.