SELANGOR

கார் இல்லாத் தினத்தில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

19 அக்டோபர் 2023, 4:31 AM
கார் இல்லாத் தினத்தில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், அக் 19: எதிர்வரும் சனிக்கிழமை கார் இல்லாத் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் உண்டு பங்கேற்குமாறு பொதுமக்களை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் அழைக்கிறது.

இந்நிகழ்ச்சி பெர்சியாரான் எஸ்-சலாம் புக்கிட் செந்தோசாவில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். அதில் 200 பங்கேற்பாளர்களுக்கு RM20 பங்கேற்பு கட்டணத்துடன் உலு சிலாங்கூர் அளவில் தேசிய விளையாட்டு தின மிதிவண்டி ஓட்டும் நடவடிக்கையையும் நடத்தப்படும்.

உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் 2வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏரோபிக்ஸ், சுகாதார பரிசோதனைகள், வண்ணம் தீட்டும் போட்டி, மேஜிக் ஷோக்கள் மற்றும் கோமாளி நகைச்சுவை போன்ற நடவடிக்கைகளும் நடைபெறும்.

மேலும் இந்நிகழ்வில் பாதேக் பின்னல் நடவடிக்கை, அதிர்ஷ்ட குலுக்கு, கண்காட்சிகள் மற்றும் நடமாடும் நூலகமும் இடம்பெறும்.

மேலும் தகவலுக்கு, www.mphs.gov.my அல்லது உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் அதிகாரப்பூர்வ முகநூலைப் பார்வையிடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.