SELANGOR

உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் நலன் மீது கவனம் - பண்டார் பாரு கிள்ளான் தொகுதி உறுப்பினர்

19 அக்டோபர் 2023, 3:50 AM
உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் நலன் மீது கவனம் - பண்டார் பாரு கிள்ளான் தொகுதி உறுப்பினர்

ஷா ஆலம், அக் 19: உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் நலன் ஆகியவை மீது பண்டார் பாரு கிள்ளான் தொகுதி உறுப்பினர் (ADN) டாக்டர் குவா பெர்ங் ஃபேயின் கவனம் செலுத்துகிறார்.

கிள்ளான் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த தனது முந்தைய அனுபவம் மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தீர்வு காண தனக்கு சாதகமாக உள்ளது என்றார்.

"கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடியிருப்பாளர்கள் அடிக்கடி வெளிப்படுத்திய பிரச்சனைகளில் ஒன்று, பொதுப் பகுதிகளிலும், பண்டார் பாரு கிள்ளானைச் சுற்றியுள்ள பள்ளிகளிலும் உள்ள உள்கட்டமைப்பு ஆகும்.

"தற்போது எம்.பி.கே.யுடன் இணைந்து சில வெள்ளப் பகுதிகளில் வடிகால்களை மேம்படுத்தும் பணியில் ஈடு பட்டுள்ளோம். மேலும் காப்பார் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளும் சரி செய்யப் பட்டுள்ளன," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மழைக்காலத்திற்கான தயார் நிலையைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் குவா, தனது இயந்திரங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஒரு தற்காலிக தங்கும் மையம் (பிபிஎஸ்) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

"எதிர்காலத்தில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க நாங்கள் பிபிஎஸ் ஒன்றை அடையாளம் கண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

மேலும், தடுப்பு முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தனது தரப்பு சுகாதாரப் பரிசோதனை திட்டங்களைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வதாக டாக்டர் குவா கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.