SELANGOR

நவம்பர் 10 அன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படும்

18 அக்டோபர் 2023, 9:38 AM
நவம்பர் 10 அன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், அக் 18: நவம்பர் 10 அன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (டிஎன்எஸ்) சபாநாயகர் தெரிவித்தார்.

மாநிலத்தின்  ஆண்டு வரவு செலவுத் திட்டம் இரண்டு வாரங்கள் நடக்கும் மாநில சட்டமன்ற கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ள விவாதம் நடக்கும் என  மாநில சட்டமன்ற சபாநாயகர்  லாவ் வெங் சான் கூறினார்.

"டத்தோ மந்திரி புசார் தாக்கல் செய்யும் அடுத்த ஆண்டு பட்ஜெட் மக்களின் வாழ்க்கை மற்றும் தேவைகளுக்கு நிதி உத்தரவாதம் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பட்ஜெட்டை அங்கீகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம் என்றார்.

"இந்த மாநாட்டின் போது, ஒவ்வொரு எஸ்கோவும்  தனது பொருப்புக்கு உட்பட்ட  இலாக்காவின்  ஒதுக்கீடுகள்   மீதான விவாதங்களுக்கு  தலைமையேற்பதுடன், இந்த ஆண்டுக்கான  கூடுதல் விநியோக சட்டமும் அங்கீகரிக்கப்படும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த மாதத் தொடக்கத்தில், அடுத்த ஆண்டு பட்ஜெட் நவம்பர் மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு மாநில வரவு செலவுத் திட்டத்திற்கு, RM1.25 பில்லியன் மேலான செலவினங்களை உள்ளடக்கிய மொத்தம் RM2.45 பில்லியன் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.