SELANGOR

 கழிவுகளை எரிப்பொருளாக்கும் ஆலையின் வழி  200,000 வீடுகளுக்குத்  தேவையான மின்சாரத்தைப் பெற முடியும்

18 அக்டோபர் 2023, 9:33 AM
 கழிவுகளை எரிப்பொருளாக்கும் ஆலையின் வழி  200,000 வீடுகளுக்குத்  தேவையான மின்சாரத்தைப் பெற முடியும்

ஷா ஆலம், 18 அக்: கோலா சிலாங்கூரில் உள்ள ஜெராமில் கட்டப்படவிருக்கும் கழிவு பொருட்களிலிருந்து எரிபொருள் (WTE) மாற்று ஆலை 200,000 வீடுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

மாநிலத்தின் முதல் மாற்று எரிபொருள் ஆலை, 2026 ல் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த திட்டம் சிலாங்கூர் நிலையானதாகவும், விவேகமாகவும் நிர்வகிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான தனது நிர்வாகத்தின் முயற்சியாகும் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஷாங்காய் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து சிலாங்கூரின் வேல்ட் வொய்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம்  மேற்கொண்ட முயற்சியின் மூலம் 200,000 வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வீட்டுக் கழிவுகளை மறுபயனீடு செய்யலாம்," என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்த மாநில மக்களால் தினமும் உற்பத்தி செய்யப்படும் மொத்த 7,000 டன் வீட்டுக் கழிவுகளில் 3,000 டன் கழிவுகளை மறுபயனீடு  தொழில்நுட்ப நிறுவனம் நிர்வகிக்கும் என்று அமிருடின் கூறினார்.

"பயன்படுத்தப்படும் பொருட்களின் வகை, குப்பைகளை வீட்டிலேயே எவ்வாறு அகற்றுவது மற்றும் மறுசுழற்சி செய்வது மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன் படுத்துவதிலிருந்து மாறுதல், மின் உற்பத்தி நிலையங்களில் கழிவு சேகரிப்பவர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது, புது தொழில் நுட்பங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

.இந்தத் திட்டம் பொருளாதார வாய்ப்புகளைத் தூண்டுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் தெனகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திற்கு விற்கப்படும் என்றும் அமிருடின் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.