SELANGOR

காஜாங்கில் விரைவில் கலாச்சார பாதை அமைக்கப்படும்

18 அக்டோபர் 2023, 6:58 AM
காஜாங்கில் விரைவில் கலாச்சார பாதை அமைக்கப்படும்

ஷா ஆலம், அக் 18: அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக தொகுதியில் சுற்றுலாவின் சாத்திய கூறுகளை ஆராய விரும்பும் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் உறுதிக்கு ஏற்ப, விரைவில் கலாச்சார பாதை அமைக்கப்படும்.

காஜாங் மடாணி கலாச்சார பாதையானது மாஸ்சா டிரான்சிட் (எம்ஆர்டி) காஜாங் ஸ்டேடியம் நிலையத்திற்கு அருகில் கட்டப்படும் என்று டேவிட் சியோங் கூறினார்.

"காஜாங் உண்மையில் சாத்தே உணவிற்குப் புகழ்பெற்றது அதுமட்டுமின்றி,   சுற்றுலாத் தலங்களான அலுவலகங்கள், ஜமேக் காஜாங் மசூதி மற்றும் காஜாங் பாரம்பரிய மையம் போன்ற வரலாற்று கட்டிடங்களும் இங்கே உள்ளன.

காஜாங் மடாணி கலாச்சார பாதையின் மூலம், நாட்டின் கலாச்சாரத்தை உயர்த்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தவும், மக்களுக்குப் பொருளாதார  வாய்ப்புகளை வழங்கவும் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

காஜாங்கின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகேஜே), சிலாங்கூர் சுற்றுலா மற்றும் ஒற்றுமைத் துறை போன்ற தரப்புகளுடன் தனது தரப்பு கூட்டத்தை நடத்தும் என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.