SELANGOR

லாரி தீப்பற்றி எரிந்ததில் அருகில் உள்ள நீர் நிலைகளில் மாசுபாடு ஏற்படவில்லை

18 அக்டோபர் 2023, 6:53 AM
லாரி தீப்பற்றி எரிந்ததில் அருகில் உள்ள நீர் நிலைகளில் மாசுபாடு ஏற்படவில்லை

ஷா ஆலம், அக். 18: நேற்று காலை செக்‌ஷன் C6 KM42.6, பண்டார் பாரு நீலாய், நெகிரி செம்பிலானில் லாரி ஒன்று தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அருகில் உள்ள வாய்க்கால் மற்றும் ஆறுகளில் மாசுக்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய, அருகிலுள்ள நீர் ஆதாரங்களில் நுழையும் மாசுபாட்டின் அபாயத்தைக் கண்டறியுமாறு சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) அதன் தரப்புக்குத் தெரிவித்தது.

"சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர் ஆதாரத்திற்கும் இடையிலான தூரம் 0.95 கிமீ தொலைவில் உள்ள சுங்கை ஜெண்டராம் ஆகும். அதே சமயம் அருகிலுள்ள ஏரி 15.15 கிமீ தொலைவில் உள்ள எல்ஆர்ஏ புக்கிட் தம்போய் மற்றும் எல்ஆர்ஏ லபோஹன் டகாங் (26.05 கிமீ) ஆகும்.

"அருகிலுள்ள வடிகால் மற்றும் ஆற்றில் மாசுபாடுகள் இல்லை என்று கண்டறியப்பட்டது. நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடிய எந்த மாசுபாடும் இல்லை," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

காலை 6.45 மணியளவில் கரி தயாரிப்பதற்காகப் பனை ஓலைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததாகவும் அந்நிறுவனம் கூறியது.

"பிளஸ் தரப்பு மற்றும் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் துப்புரவுப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் சமயம் லுவாஸ் எப்போதும் நீர் தரப் பிரச்சனைகளின் சாத்தியம் மற்றும் ஆபத்துகளை உடனடியாகக் கையாள்வதை உறுதிசெய்யத் தயாராக உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.