SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

18 அக்டோபர் 2023, 1:07 AM
இன்று மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

ஷா ஆலம், அக் 18:  அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு

விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

கம்போங் சுங்கை தெரெந்தாங் (ரவாங்), பண்டார் பாரு கிள்ளான் (ஆ சுய் உணகம், ஜாலான் தெப்பி சுங்கை அருகில்) மற்றும் கின்றாரா ஆகிய இடங்களில் விற்பனை நடைபெறும்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850 இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS) நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச் செயல்படுத்த சிலாங்கூர் RM40 மில்லியன் மானியம் செலவிட்டது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூ

லம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.