SELANGOR

ஷா ஆலமில் மித்ராவின் மடாணி மருத்துவ முகாம்- ஞாயிறு அன்று நடைபெறும்

17 அக்டோபர் 2023, 9:43 AM
ஷா ஆலமில் மித்ராவின் மடாணி மருத்துவ முகாம்- ஞாயிறு அன்று நடைபெறும்

ஷா ஆலம், அக் 17- ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம்

மற்றும் மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின் ஏற்பாட்டில்

மருத்துவ முகாம் இங்குள்ள செக்சன் 16, டேவான் ஜாத்தி எம்.பி.எஸ்.ஏ.

மண்டபத்தில் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்த

மருத்துவ முகாமில் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.

இற்த மருத்துவ முகாமில் குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும்

பெக்கா பி40 தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த மருத்துவ முகாமில் ஷா ஆலம் வட்டார மக்கள் தவறாது கலந்து

பயன் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். இந்த

மருத்துவ முகாம் தொடர்பான மேல் விபரங்களுக்கு சரவணன் (010-2293375)

மற்றும் நாதன் (017-2769303) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.