SELANGOR

தீபாவளியை முன்னிட்டு ஷோப்பிங் வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்கலாம் - பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் தொகுதிகள்

17 அக்டோபர் 2023, 9:34 AM
தீபாவளியை முன்னிட்டு ஷோப்பிங் வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்கலாம் - பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் தொகுதிகள்

ஷா ஆலம், அக்.17: பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில் உள்ள இந்திய சமூகத்தினர், RM3,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் தீபாவளியை முன்னிட்டு ஷோப்பிங் வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப் படுகிறார்கள்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் RM200 மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் வவுச்சர்க்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 28 வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார். மேலும், விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பகுதியில் வாக்காளராக இருந்தால் வேண்டும்.

"விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் வருமான அறிக்கை உட்பட மனைவி அல்லது கணவருடைய அடையாள அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சமூக சேவை மையத்திற்கு அனுப்பலாம். அதுமட்டுமில்லாமல், 03-60816392 அல்லது புலனம் 019-2827129 மற்றும் 011-23292976 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் ஜோம் ஷோப்பிங் வவுச்சர் திட்டத்திற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், 82,400 பெறுநர்கள் பயனடைவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.