கோலா சிலாங்கூர், அக் 17: சுற்றுச்சூழல் தரம் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜெராமில் கழிவுகளிலிருந்து எரிசக்தியாக்கும் (WTE) ஆலை மற்றும் பத்து அரங்கில் எரியூட்டும் இயந்திரம் கட்டப்பட்டது.
இந்த விவகாரம் 2008 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் பலமுறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
"நாம் தொழில்நுட்பத்தை நம்ப வேண்டும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் மற்றும் ஜப்பான் அல்லது சீனா போன்ற சில பாதுகாப்பான நாடுகளில் அதைப் பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை அதிகரிப்பைத் தொடர்ந்து கழிவுப் பிரச்சனையை சமாளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று எரிசக்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சந்தித்த போது அவர் கூறினார்.
கழிவுகளை கொட்ட நில பயன்பாடு நீண்ட காலம் நீடிக்காத காரணத்தால், தற்போது குப்பை கிடங்குகளில் திண்மக் கழிவுகளை அகற்றுவதும் தீங்கு விளைவிக்கும் என்று அமிருடின் விளக்கினார்.
"குப்பைக் கிடங்கு ஒரு பகுதியை 20 முதல் 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடையாமல் வைத்திருக்கும் மற்றும் நிலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார். அதுமட்டுமில்லாமல், சிலாங்கூர் ஒரு நாளைக்கு 7,000 டன் குப்பைகளை சேகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.








