SELANGOR

மேரு தொகுதியில் 115 டிங்கி சம்பவங்கள் - தடுப்பு நடவடிக்கைகள்

17 அக்டோபர் 2023, 9:03 AM
மேரு தொகுதியில் 115 டிங்கி சம்பவங்கள் - தடுப்பு நடவடிக்கைகள்

ஷா ஆலம், அக் 17: மேரு தொகுதியில் 115 டிங்கி சம்பவங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் கையுறை தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர்.

நோய்த்தொற்றுகளின் திடீர் அதிகரிப்பு பரவுவதைத் தடுக்க மாவட்ட சுகாதார அலுவலகம் (பிகேடி) மற்றும் கிள்ளான் மாநகராட்சி (எம்பிகே) ஆகியவற்றுடன் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த தூண்டியது என்று மரியம் அப்துல் ரஷிட் கூறினார்

"லார்வாக்களை அகற்றுவது மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதுடன், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய பல பகுதிகளில் டிங்கி தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கினோம்," என்று அவர் கூறினார்.

டாப் க்ளோவ் பெண்கள் விடுதி, ஜாலான் அபாடி 1பி மற்றும் 10 சி, தாமான் டயா மாஜூவில் உள்ள ஜாலான் பேருவாஸ் 2பி மற்றும் 2சி ஆகியவை இதுவரை கவனம் செலுத்தப் பட்ட பகுதிகளாகும்.

தாமான் பெரிண்டஸ்ட்ரியன் மேரு இண்டாவில் உள்ள பிஜிஏ நியூ விடுதி மற்றும் ஜாலான் கோர்போரட் 7சி மற்றும் ஜாலான் ஜம்பு பத்து 26/கேயு10, தாமான் மேரு ரியா ஆகியவற்றிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) 40வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME40) 70 டிங்கி ஹாட்ஸ் பாட்களைக் கண்டறிந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.