SELANGOR

கைவினை தோழன் ( கிராஃப்ட் பிரண்ட்ஸ்) கார்னிவல் 2023 இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

16 அக்டோபர் 2023, 9:25 AM
கைவினை தோழன் ( கிராஃப்ட் பிரண்ட்ஸ்) கார்னிவல் 2023 இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், அக் 16: எதிர்வரும் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை புக்கிட் ஜாலில் பெவிலியனில் நடைபெறவுள்ள சிலாங்கூர் கிராஃப்ட் பிரண்ட்ஸ் கார்னிவல் 2023 இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் 300 கடைகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள் மற்றும் வெற்றிகரமான தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் அமர்வுகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"அது தவிர, சுற்றுச்சூழல் ஓவியத் திறன்கள் மற்றும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் நுட்பங்கள் கற்பிக்கும் பட்டறையும் இடம்பெறும்.

"2023 சிலாங்கூர் கிராஃப்ட்ஸ் பிரண்ட்ஸ் கார்னிவல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம். அங்கு சந்திப்போம்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.