SELANGOR

13 மில்லியன் மணி நேரம் விபத்து இல்லாமல் வேலை செய்து சாதனை - கும்புலான் செமஸ்தா

12 அக்டோபர் 2023, 11:52 AM
13 மில்லியன் மணி நேரம் விபத்து இல்லாமல் வேலை செய்து சாதனை - கும்புலான் செமஸ்தா
ஷா ஆலம், அக் 12: கும்புலான் செமஸ்தா 13 மில்லியன் மணிநேரம் விபத்து இல்லாமல் (எல்டிஐ) வேலை செய்து சாதனை படைத்துள்ளன. அனைத்து ஊழியர்களின் உறுதியான அர்ப்பணிப்புடன், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தின் செயல்திறனை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்று கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் அதன் துணை நிறுவனமான இன்ஃப்ராசெல் செயல்படுத்திய மெகா சாலை மேம்பாடு திட்டமும் மேற்கண்ட வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது என அந்நிறுவனம் தெரிவித்தது. "எல்டிஐ 2023க்கான 13 மில்லியன் மணி நேர இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்காகக் கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

"அனைத்து கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி 13,003,048 மில்லியன் மணிநேரங்களை எட்ட முடிந்தது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது. ஒன்பது மாவட்டங்களில் பெரிய அளவிலான சாலை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இதுவரை 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறையின் தலைவர் சுஹைமி காலிடி தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.