ஷா ஆலம், அக் 12: எதிர்வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அழைக்கிறது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, பசார் ராயா மாத்தாஹாரி PJS 2/3 இல் பொதுமக்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் புகார்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் முன்னேற்றத்தைக் காண்பதுடன் குடியிருப்பாளர்களுக்கு உடனடியாகக் கருத்துக்களை எம்பிஏஜே வழங்கும்.
மேலும், இந்நிகழ்வில் கட்டணம் செலுத்துதல், மேல்முறையீடுகள் மற்றும் மதிப்பீட்டு வரியின் பெயர் மாற்றத்திற்கான கவுண்டரையும் எம்பிஏஜே திறக்கும்.
அதுமட்டுமில்லாமல், தாபோங் ஹாஜி, மலேசியா காவல்துறை கண்காட்சிகள் உரைகள் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் ஆகியவையும் இடம்பெறும்.








