SELANGOR

ஷா ஆலம் மலர் சந்தை மற்றும் ஆர்க்கிட் கண்காட்சியைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அழைப்பு

12 அக்டோபர் 2023, 8:09 AM
ஷா ஆலம் மலர் சந்தை மற்றும் ஆர்க்கிட் கண்காட்சியைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், அக் 12: அக்டோபர் 25 முதல் 29 வரை நடைபெற உள்ள ஷா ஆலம் மலர் சந்தை மற்றும் ஆர்க்கிட் கண்காட்சியைப் பார்வையிடப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை செக்‌ஷன் 14யில் உள்ள சிலாங்கூர் ஜப்பான் நட்பு பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும்.

"சந்தை முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பூக்களின் வாங்கவோ அல்லது அவற்றின் அழகு மற்றும் தனித்துவத்தைப் பார்க்க வருமாறு மக்கள் அழைக்கப்படுகிறார்கள்" என்று ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மலர் விற்பனை மற்றும் கண்காட்சிகள் மட்டுமின்றி, பாதேக் நெசவு, குழந்தைகளுக்கான சிறப்பு மீன்பிடிக்கும் நடவடிக்கை, தொழில்முறை கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்களும் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு நிகழ்வின் நேரம் மற்றும் இடம் பற்றிய எந்த தகவலுக்கும், முகநூல் அல்லது ஷா ஆலம் நகர சபையின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.