SELANGOR

மேரு சட்டமன்ற தொகுதிக்கான வவுச்சர்கள் பயனாளிகளுக்கு விநியோகம்

12 அக்டோபர் 2023, 6:33 AM
மேரு சட்டமன்ற தொகுதிக்கான வவுச்சர்கள் பயனாளிகளுக்கு விநியோகம்

கிள்ளான், அக் 12: மேரு மாநிலச் சட்டமன்ற தொகுதிக்கான வவுச்சர்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்க தொடங்கப் பட்டுள்ளது என்று அதன் பிரதிநிதி தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பிறந்தவர்களுக்கு 150 ரிங்கிட் மதிப்புள்ள ஷோப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக மரியம் அப்துல் ரஷித் கூறினார்.

"நாங்கள் பல விண்ணப்பங்களைப் பெறுகிறோம், இதுவரை வவுச்சர்களைப் பெறாத புதிய விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், உடல்நிலை சரியில்லாதப் பெறுநர்களுக்கு வவுச்சர்களை அவர்களின் வீட்டுக்கே அனுப்புகிறோம்.

"கூடுதலாக, விண்ணப்பத்தை எளிதாக்குவதற்காக, ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா போன்ற திட்டங்களில் நாங்கள் கவுண்டர்களைத் திறக்கிறோம். இதன் மூலம், விண்ணப்படிவத்தை நிரப்புவதில் உள்ள சிக்கல்களை களைய முடியும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு முதல் வவுச்சர்களின் மதிப்பு RM100யிலிருந்து RM150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.