SELANGOR

நீர் விநியோக மறுசீரமைப்பு 33.92 சதவீதத்தை எட்டியுள்ளது

12 அக்டோபர் 2023, 1:43 AM
நீர் விநியோக மறுசீரமைப்பு 33.92 சதவீதத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், அக் 12: இன்று காலை 6 மணி நிலவரப்படி, சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு

நிலையத்தின் பராமரிப்புப் பணிகளால் பாதிக்கப்பட்ட நீர் விநியோக மறுசீரமைப்பு 33.92

சதவீதத்தை எட்டியுள்ளது.

பெட்டாலிங்கில் விநியோகம் 73 சதவீதத்தையும், கோலாலம்பூரில் 6.9 சதவீதம் மற்றும்

உலு லங்காட்டில் 75.5 சதவீதத்தையும் எட்டியுள்ளது என ஆயர் சிலாங்கூர்

தெரிவித்துள்ளது.

"பயனர்களின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு

பகுதிக்கு நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான காலம் வேறுபடும்,`` என்று

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வழங்கல் குறித்தத் தகவல்களை அவ்வப்போது அதிகாரப்பூர்வத் தகவல்

தொடர்பு தளம் https://waterupdates.airselangor.com/ மூலம் பயனர்கள் பெற

அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.