SELANGOR

வெள்ள அபாயத்தைக் குறைக்க இரும்பு தடுப்பு நிறுவப்பட்டது

11 அக்டோபர் 2023, 6:23 AM
வெள்ள அபாயத்தைக் குறைக்க இரும்பு தடுப்பு நிறுவப்பட்டது

ஷா ஆலம், அக் 11: தாமான் ஸ்ரீ பெலாபுஹான், கிள்ளானில் இரும்பு தடுப்பு நிறுவப்பட்டதன் மூலம் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் வெள்ள அபாயம் குறையும்.

கிள்ளான் மாநகராட்சி RM22,000 செலவில் நிறுவிய மூன்று இரும்பு வேலி யூனிட்டுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுமையடைந்ததாகப் பண்டமாரன் தொகுதி உறுப்பினர் தோனி லியோங் துக் சீ கூறினார்.

இதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 30 வீடுகள் பாதிக்கப்பட்டதால், குடியிருப்பாளர்களின் சூழ்நிலையை உணர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

“ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போது அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால், அங்குள்ள மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். மாநிலத் தேர்தலுக்கு முன், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து, எம்.பி.கே.,யிடம் ஆலோசித்தேன்.

"எம்.பி.கே. பின்னர் ஒரு இரும்பு தடுப்பை  நிறுவ முன்மொழிந்தது. மற்றும் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கை வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதுவரை இரும்பு தடுப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், கனமழை பெய்தாலும் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

"இருப்பினும், அதைக் கண்காணிக்க பகுதிவாசிகளை கேட்டுக்கொள்கிறேன். வெள்ளம் ஏற்பட்டால், உடனடியாகத் தெரிவிக்கவும்," என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.