ஷா ஆலம், அக் 11- சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்.ஆர்.ஏ.) பராமரிப்புப் பணி சில தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டாலும்
மாற்று ஆதாரங்கள் மூலம் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயனீட்டாளர்கள் சீரான நீர் விநியோகத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக களத்தில் ஏற்பட்டுள்ளச் சிக்கல்களைத் தீர்க்க தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்தது.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு மற்றும் சாதனங்களை மாற்றுதல் தொடர்பான பணிகள்முழுமைடைந்துள்ளன. இருப்
சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் மாற்று ஆதாரங்கள் மூலம் பயனாளர்களுக்கு கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் அது தெரிவித்தது.
பயனீட்டாளர்களின் இருப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் தூரத்தைப் பொறுத்து நீர் விநியோக காலம் மாறுபடும். நாளை மதியம் 12 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் விநியோகம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களுக்கு முகநூல், இண்ட்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் வாயிலாகவும் அல்லது https://waterupdates.








