SELANGOR

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேம்பாடு பணிகள் - நீர் விநியோகத் தடை

10 அக்டோபர் 2023, 8:31 AM
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேம்பாடு பணிகள் - நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், அக் 10: சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) மேம்பாடு, பராமரிப்பு மற்றும் கருவிகள் மாற்றும் பணிகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கப்பட்டன.

இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய பழுதுபார்க்கும் பணிகள் இரவு 7 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

"பின்னர், நீர் விநியோகம் படிப்படியாகப் பயனர்களுக்கு விநியோகிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் முழுமையாக நீர் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் லாரிகளை ஆயர் சிலாங்கூர் அனுப்பும்," என்று அவர் கூறினார்.

ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வழியாக நீர் வழங்கல் தடைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம் அல்லது ஆயர் சிலாங்கூரை 15300 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்களை www.airselangor.com என்ற இணையதளம் மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலி அல்லது அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு தளங்கள் https://waterupdates.airselangor.com/ இல் உள்ள உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து, பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளை ஆயர் சிலாங்கூர் அறிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.