கோலாலம்பூர், அக் 10 - இன்று காலை தீபகற்பத்தில் உள்ள நான்கு பகுதிகளில்
ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு (ஏபிஐ) அளவீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
குறிப்பாகச் செராஸ்யில் 169ஆக பதிவாகியுள்ளது.
காற்று மாசுபாடு குறியீட்டு அளவீடு பத்து பஹாட் (158), லார்கின், ஜொகூர் (137)
மற்றும் புக்கிட் ராம்பாய், மலாக்காவில் (156)ஆகப் பதிவாகியுள்ளன என சுற்றுச்சூழல்
துறையின் (DOE) காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
இதற்கிடையில், 60 பகுதிகள் மிதமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவீடுகளைப் பதிவு
செய்துள்ளன. அதனைத் தொடர்ந்து, நான்கு பகுதிகள் 50க்கும் குறைவான
அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.
0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100
மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்
ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300
மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.
சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை
அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம். கடந்த மே
மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு
ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான்
பிராந்தியத்தில் மிகவும் கடுமையான புகை மூட்டம் நிகழும்
என எச்சரித்தனர்.
- பெர்னாமா








