SELANGOR

ஜோம் ஷோப்பிங் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் இன்சான் இஸ்திமேவா வவுச்சர்கள் சமர்ப்பிப்பு - தெலோக் பங்லிமா காராங்

10 அக்டோபர் 2023, 7:38 AM
ஜோம் ஷோப்பிங் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் இன்சான் இஸ்திமேவா வவுச்சர்கள் சமர்ப்பிப்பு  - தெலோக் பங்லிமா காராங்

ஷா ஆலம், அக் 10: ஜோம் ஷோப்பிங் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) மற்றும் இன்சான் இஸ்திமேவா (SMIS) வவுச்சர்கள் சமர்ப்பிப்பு கவுண்டரை யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) நாளை தெலோக் பங்லிமா காராங் முகிம் தலைமை அலுவலகத்தில் திறக்கவுள்ளது.

இரண்டு நாட்களுக்குக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஜோம் ஷாப்பிங் வவுச்சரை இன்னும் கோராத பெறுநர்களுக்குக் கவுண்டர் திறந்திருக்கும் என்று முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வாரிசுகள் மட்டுமே வவுச்சர்களைப் பெற முடியும் என்றும், https://smue.yawas.my/semakan/ என்ற இணையதளத்தின் மூலம் சரிபார்க்க முடியும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, வாரிசின் அடையாள அட்டை வாக்காளர் பதிவு சரிபார்ப்பு சீட்டு மற்றும் இருப்பிடச் சரிபார்ப்பு ஆகியவற்றின் நகல் அடங்கிய முழுமையான விண்ணப்பப் படிவத்தை பொதுமக்கள் உறுதிசெய்து புதிய பதிவுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

"இத்திட்டகளுக்கான இறப்பு உரிமைகோரல்களுக்கான ஆவண சமர்ப்பிப்பு சேவைகளும் கவுண்டரில் செய்யப்படலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://smue.yawas.my/admin/online_semakan_kp.php இல் புதிய இணையப்பதிவு செய்யலாம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.