SELANGOR

சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (SIBS) 2023 இல் மொத்தம் 50,000 பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு

10 அக்டோபர் 2023, 7:35 AM
சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (SIBS) 2023 இல் மொத்தம் 50,000 பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு

ஷா ஆலம், 9 அக்: அக்டோபர் 19 முதல் நான்கு நாட்கள் நடைபெறும் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (SIBS) 2023 இல் மொத்தம் 50,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் எட்டாவது பதிப்பு கடந்த ஆண்டை விட RM1.5 பில்லியன், RM500,000 கூடுதல் பரிவர்த்தனை மதிப்பை ஈர்க்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது என்று முதலீட்டு எஸ்கோ தெரிவித்துள்ளார்.

"பார்வையாளர்கள் குழுக்கள், கண்காட்சி பங்கேற்பாளர்கள், வர்த்தக பார்வையாளர்கள் மற்றும் மாநாட்டுப் பேச்சாளர்கள் உட்பட 60 வெளிநாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் ஈடுபாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் செயல்படுத்தும் திட்டம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் மற்றும் டிஜிட்டல் முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் கவனம் செலுத்துகிறது என்று இங் சி ஹான் கூறினார்.

மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்புகளை அதிகரிப்பதுடன், தென்கிழக்கு ஆசிய சந்தையின் நுழைவாயிலாகச் சிலாங்கூரின் நிலையை இந்த மாநாட்டால் வலுப்படுத்த முடிந்தது என்று அவர் விளக்கினார்.

"இந்த மாநிலத்தின் மூலம் தங்கள் வணிகத்தை பிராந்தியத்திற்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களைச் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு ஈர்க்க முடியும்" என்று அவர் கூறினார்.

மேலும், வருடாந்திர மாநாட்டில் ஆறு முக்கிய நிகழ்வுகள் உள்ளன, அதாவது சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (உணவு, குளிர்பானம்) மற்றும் சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (மருந்து).

சிலாங்கூர் தொழில் பூங்கா கண்காட்சி, சிலாங்கூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், சிலாங்கூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்க கண்காட்சி மற்றும் ஆசிய வணிக மாநாடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.