SELANGOR

எம்.பி.எச்.எஸ். ஏற்பாட்டில் எழுவர் கால்பந்து போட்டி- வெ.4,500 வெல்ல வாய்ப்பு

10 அக்டோபர் 2023, 7:31 AM
எம்.பி.எச்.எஸ். ஏற்பாட்டில் எழுவர் கால்பந்து போட்டி- வெ.4,500 வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், அக் 10-  உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக ஏற்பாட்டில்  வரும் நவம்பர் 11ஆம் தேதி எழுவர் கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு  மொத்தம் 4,500 வெள்ளி மதிப்புள்ள பரிசுகளைத் தட்டிச்  செல்லும் வாய்ப்பு உள்ளது.

உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக முதலாவது மண்டல உறுப்பினர் கிண்ணத்திற்கான  இப்போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கி சுங்கை செலிசெக் பள்ளி மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் 32 குழுக்கள்  மட்டுமே பங்கேற்க முடியும் .

இப்போட்டியின் வெற்றியாளருக்கு 2,000  ரொக்கம் மற்றும் வெற்றியாளர் கிண்ணம், இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 1,200 வெள்ளி, மூன்றாவது வெற்றியாளருக்கு 800 வெள்ளி மற்றும் நான்காவது வெற்றியாளருக்கு 500  வெள்ளி வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் 017-348 2308 (இஸ்மெட்) அல்லது 019-274 3230 (பாமான்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.