ஷா ஆலம், அக் 10- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை மேலும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.
புக்கிட் மெலாவத்தி தொகுதி நிலையிலான மலிவு விற்பனை ஜாலான் அங்கிரிக் 1 என்ற முகவரியிலும் மேரு தொகுதி நிலையிலான விற்பனை ஜாலான் சுங்கை காப்பார் இண்டா, கார் நிறுத்துமிடத்திலும் பந்திங் தொகுதி நிலையிலான விற்பனை ஜென்ஜாரோம் சமூக மண்டபத்திலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும் நடைபெறும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக
இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.








