ஷா ஆலம், அக் 10: புத்ரா பெர்மாய், புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் உள்ள வீடொன்று தீயில் எரிந்து சுமார் இரண்டு மாதங்களாகத் தங்குமிடத்தை இழந்த குடும்பத்தின் அவல நிலை கோத்த கெமுனிங் பிரதிநிதியின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலிருந்து (PTD) சம்பவம் பற்றிய முழுமையான மதிப்பீடு பெறப்பட்ட பின்னர் யாப் யான் ஹாங்கின் வீட்டின் சேதம் சரிசெய்யப்படும் என்று எஸ் பிரகாஷ் உறுதியளித்தார்.
"ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவரின் வீட்டின் நிலையைப் பார்க்க நான் களத்திற்குச் சென்றேன்.
“உதவி படிவம் மாவட்ட இயக்குனரிடம் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீட்டைச் சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளும் வகையில், விரைவில் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்..
தற்போதைக்குப் பாதிக்கப்பட்டவர் தனது மனைவியுடன் நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். பழுதுபார்க்கும் பணிக்காக காத்திருக்கிறது என்று பிரகாஷ் தெரிவித்தார்.
"சம்பந்தப்பட்ட குடும்பத்தின் நிலைமைக்கு நான் அனுதாபப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.








