SELANGOR

பிரதமர் மற்றும் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் பாலஸ்தீனம் பற்றி கலந்துரையாடல்

10 அக்டோபர் 2023, 3:56 AM
பிரதமர் மற்றும் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் பாலஸ்தீனம் பற்றி கலந்துரையாடல்

கோலாலம்பூர், அக் 10: பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் சம்பவம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் கலந்துரையாடினர்.

அக் கலந்துரையாடல் தொலைபேசி மூலம் நடைபெற்றதாகப் பிரதமர் நேற்றிரவு X இல் தெரிவித்தார்.

"பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம்" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய ஆட்சியை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தில் நிகழ்ந்துள்ள தாக்குதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப் பட்டுள்ளன.

காசா பகுதியில் தற்போது நிலவும் வன்முறை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பாலஸ்தீன மக்கள் மனிதநேய அறக்கட்டளை கணக்கிற்கு (AAKRP) உடனடியாக RM1 மில்லியனை வழங்குவதாக நேற்று அரசாங்கம் அறிவித்தது.

– பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.