SELANGOR

தேசிய விளையாட்டு தினத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள்- பண்டார் பாரு பாங்கி உலு லங்காட் மாவட்டம்

10 அக்டோபர் 2023, 3:04 AM
தேசிய விளையாட்டு தினத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள்-  பண்டார் பாரு பாங்கி உலு லங்காட் மாவட்டம்

ஷா ஆலம், அக்.10: தேசிய விளையாட்டு தினத்தை அக்டோபர் 15 அன்று காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகேஜே) உலு லங்காட் மாவட்டத்திலுள்ள பண்டார் பாரு பாங்கியில் நடத்தவுள்ளது.

இந்நிகழ்வு காலை 6.30 மணி முதல் 11 மணி வரை தாமான் தாசிக் செம்பாகா, பண்டார் பாரு பாங்கியில் நடைபெறும். மேலும், இந்நிகழ்ச்சிக்கு கேபிஎம்சி சுகாதார மையத்தின் மூலம் இலவச மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படும் என எம்.பி.கே.ஜே முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொண்டு வரும் முதல் 500 பங்கேற்பாளர்கள் பிரத்யேக டி-சர்ட் மற்றும் பையைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அந்நிகழ்வில் ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், வர்ணம் தீட்டும் போட்டி, ``வன் வார்க்`` மற்றும் அதிர்ஸ்ட குழுக்கு போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உணவு வாகன விற்பனை, பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்காட்சிகள் ஆகியவையும் இடம்பெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.