ஷா ஆலம், அக் 10: நேற்று மாலை 6 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள ஐந்து
பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு (API) அளவீடுகள்
பதிவாகியுள்ளன.
காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் பந்திங் (154), கிள்ளான் (152), பெட்டாலிங் ஜெயா
(118), ஷா ஆலம் மற்றும் ஜோஹான் செத்தியாவில் (151)ஆகப் பதிவு செய்துள்ளன என
மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், செராஸ் (163), நீலாய் (133), புக்கிட் ரம்பாய் (155) மற்றும் பத்து பஹாட் (149)
ஆகியவை ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு (API) அளவீடுகளைப் பதிவு
செய்துள்ளன.
0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100
மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்
ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300
மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.
சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை
அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம். கடந்த மே
மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு
ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு
ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான புகை மூட்டம் நிகழும்
என எச்சரித்தனர்.








