ஷா ஆலம், அக் 9: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அக்டோபர் 29 அன்று நகரின் 23வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஓபன் கயாக் (படகு) போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் RM1,000 ரொக்கத்தை உயர் பரிசாக வழங்கப்படுகிறது.
இப்போட்டி தாமான் தாசிக் ஷா ஆலமில் நடைபெறும். இதில் RM20 நுழைவுக் கட்டணத்துடன் ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகள் இடம் பெறவுள்ளன. அதே சமயம் இப்போட்டிக்குப் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி அக்டோபர் 22 ஆகும்.
பிரதான ரொக்கப் பரிசான RM1,000 தவிர, இரண்டாவது RM700, மூன்றாவது RM500, நான்காவது RM300, ஐந்தாவது RM100 மற்றும் ஆறாவது முதல் பத்தாவது இடங்களுக்கு RM50 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது கூகுள் படிவ இணைப்பு https://forms.gle/GubGMF2LoJ35
மேலும் தகவலுக்கு 013-635 9774 (ஹவிஸ்) அல்லது 016-215 6479 (சம்ரி) ஐ தொடர்பு கொள்ளவும்.








