SELANGOR

விளக்க நோட்டீசுக்குப் பதில் அளிக்கத் தவறிய நிறுவனத்திற்கு வணிக உரிமம் ரத்து - எம்பிபிஜே

9 அக்டோபர் 2023, 8:41 AM
விளக்க நோட்டீசுக்குப் பதில் அளிக்கத் தவறிய  நிறுவனத்திற்கு வணிக உரிமம் ரத்து - எம்பிபிஜே

ஷா ஆலம், 9 அக்.: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அனுமதியின்றி சிறப்பு வாகன நிறுத்தும் இடத்தில் சாயம் பூசியதற்கான விளக்க நோட்டீசுக்குப் பதில் அளிக்கத் தவறியதற்காக நிறுவன ஒன்றின் வணிக உரிமத்தை ரத்து செய்தது.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் கார்ப்ரேட் கம்யூனிகேஷன் யூனிட் மீடியா செயலகம் அறிக்கை ஒன்றின் மூலம் அந்நிறுவனம் ஒரு வாரத்திற்குள் பதிலைச் சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எம்பிபிஜே தெரிவித்துள்ளது.

“எம்பிபிஜே கவுன்சிலின் அனுமதியின்றி சிறப்பு வாகன நிறுத்தும் இடத்தில் சாயம் பூசியதற்கான குற்றத்தை நான்கு நிறுவனங்கள் செய்ததாகப் புகார் வந்தது.

"அறிவிப்பு வெளியிடப்பட்ட காலகட்டத்தில், எம்பிபிஜே மூன்று நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கருத்துக்களைப் பெற்றது, ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து எந்த கருத்தையும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் நிலவரப்படி, காலி வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களால் சரியாகப் பராமரிக்கப்படாததன் தொடர்பாக மொத்தம் 244 புகார்களைப் பெற்றதாக  எம்பிபிஜே தெரிவித்துள்ளது.

"கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களின் மொத்தம் 423 உரிமையாளர்கள் நீண்ட நாள் புல் வெட்ட செலுத்தும் பணத்தில் பாக்கி வைத்துள்ளனர், மேலும் எம்பிபிஜே நிலுவைத் தொகையைக் கோருவதற்குச் சிவில் நடவடிக்கை எடுத்து வருகிறது``.

அதைத் தொடர்ந்து, காலி வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட இடங்களின் உரிமையாளர்களை அவர்களின் லாட் பகுதிகள் எப்போதும் சுத்தமாகவும் நன்றாகவும் பராமரிக்கப் படுவதை உறுதி செய்யுமாறு எம்பிபிஜே வலியுறுத்தியது.

மெனாரா எம்பிபிஜேயின் 9வது மாடியில் உள்ள சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் துறையை தொடர்பு கொண்டு உரிமையாளர் நிலுவைத் தொகையை சரிபார்த்து,பணத்தைச் செலுத்தலாம் என எம்பி பிஜே தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.