SELANGOR

புகைமூட்டக் காலத்தில் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் - லுவாஸ்

9 அக்டோபர் 2023, 7:19 AM
புகைமூட்டக் காலத்தில் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் - லுவாஸ்

ஷா ஆலம், அக்டோபர் 9: தற்போதைய புகைமூட்ட காலத்தில் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளைச் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) பகிர்ந்து கொண்டது.

வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் மற்றும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு குவளை போதுமான வெற்று நீரை குடிக்கவும் என லுவாஸ் முகநூல் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.

"புகைமூட்டம் என்பது சாதரணக் கண்களால் பார்க்க முடியாத பல சிறிய துகள்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். மேலும் இது மக்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

"எனவே, சுகாதாரத்தில் புகைமூட்டம் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று லுவாஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் வீட்டில் காற்று எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் சிகரெட் புகை அல்லது திறந்த எரிப்பு போன்ற மாசுபாட்டை ஏற்படுத்தும்  நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும்.

கூடுதலாக, வீட்டிற்கு வெளியே இருந்தால், முகக்கவரி அணிய வேண்டும், வாகனம் ஓட்டும் போது குளிரூட்டியைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளைச் செய்த பிறகு உங்கள் முகத்தையும் கைகளையும் கழுவவும் அறிவுறுத்தப்படுகிறது.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (IPU) அளவீடுகளை அறிய பொதுமக்கள் https://apims.doe.gov.my/home.html என்ற இணைப்பைப் பார்க்கவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.