SELANGOR

சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளன

9 அக்டோபர் 2023, 7:18 AM
சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளன

ஷா ஆலம், அக் 9: இன்று மதியம் 2 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள ஐந்து

பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருந்தன. அதில் பந்திங் அதிகபட்ச

காற்று மாசுக் குறியீட்டு (ஏபிஐ) அளவை (156) பதிவு செய்ததுள்ளது.

காற்று மாசுக் குறியீட்டு அளவு ஷா ஆலம் (153), கிள்ளான் (153), ஜோஹான் செத்தியா

(152) மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் (132)ஆக உள்ளது என மலேசிய காற்று மாசுபாடு

குறியீட்டு மேலாண்மை அமைப்பு (Apims) இணையத்தின் வழி தெரிவித்தது.

செராஸ் (159), நீலாய் (140) மற்றும் புக்கிட் ரம்பாய் (153) ஆகியவை ஆரோக்கியமற்ற

காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகளைப் பதிவு செய்தன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகளை அறிய பொதுமக்கள்

https://apims.doe.gov.my/home.html இணைப்பைப் பார்க்கவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.