SELANGOR

அனிஸ் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM4 மில்லியனைச் செலவிட்டுள்ளது

7 அக்டோபர் 2023, 11:49 AM
அனிஸ் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM4 மில்லியனைச் செலவிட்டுள்ளது

சைபர்ஜெயா, அக் 7: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவித் திட்டத்தை (அனிஸ்) செயல்படுத்த மாநில அரசு மொத்தம் RM4 மில்லியனைச் செலவிட்டுள்ளது என்று சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் சுமையைக் குறைக்க சிறப்புக் குழந்தைகளுக்கான சக்கர நாற்காலிகள், சுவாச உதவி மற்றும் பிசியோதெரபி சேவைகள் போன்ற உபகரணங்களின் தேவையை இந்த உதவி உள்ளடக்கியதாக அன்பால் சாரி கூறினார்.

"மொத்தம் 250 சிறப்பு குழந்தைகள் இந்த பலன்களைப் பெற்றனர். அனிஸ் மையத்தில் கற்பிக்கும் 33 ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் பயிற்சியின் பலனைப் பெற்றனர்," என்று அவர் கூறினார்.

மேலும், மாநிலம் முழுவதும் அனிஸ் மையங்களின் கட்டுமானத்தை விரிவுபடுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது என அன்பால் தெரிவித்தார்

"சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) மற்றும் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஆகியவற்றுடன் இணைந்து அவற்றின் வளாகங்களை மையங்களாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.