ஷா ஆலம், அக் 7: கோபெராசி வர்கா ஹிஜ்ரா (கோஹிஜ்ரா) இந்த வாரம் முதல் மூன்று டிரக்குகள் மூலம் மலிவு விலையில் அடிப்படைப் பொருள்களை விற்பனை செய்வதாக அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.
காய்கறிகள், அரிசி மற்றும் மாவுகளை கோத்தா கெமுனிங் மற்றும் செக்ஷன் 15இல் வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன என முஹம்மட் சியுக்ரி இஸ்மாயில் கூறினார்.
"எங்களிடம் 120க்கும் மேற்பட்ட ஸ்டாக்கிங் யூனிட்கள் (SKUs) உள்ளன மற்றும் புதிய காய்கறிகள் RM1 முதல் RM5 வரையில் விற்கப்படுகின்றன.
"இந்த வார இறுதியில், அடிப்படைப் பொருள்களை விற்பனை செய்யும் டிரக்குகள், செக்ஷன் 32ல் உள்ள விஸ்மா கோஹிஜ்ராவில் காலை 7 முதல் 10 மணி வரை இருக்கும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
கோஹிஜ்ரா என்பது அதன் உறுப்பினர்களான ஹிஜ்ரா பங்கேற்பாளர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுறவு ஆகும்.
ஹிஜ்ரா சிலாங்கூர் நலநிதி, லாடாங் ஆலம் வாரிசன், கெண்டேரா சஜி, விற்பனை இயந்திரங்கள், உறைந்த ரப்பரில் முதலீடு செய்தல் மற்றும் மை தானி ஆகியவை கோஹிஜ்ரா திட்டங்களில் அடங்கும்.








