SELANGOR

இலவசச் சுகாதார பரிசோதனையில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

6 அக்டோபர் 2023, 12:41 PM
இலவசச் சுகாதார பரிசோதனையில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், அக் 6: கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற சேவை மையம் சுற்றுப்புற குடியிருப்பாளர்களை எம்.டி.கே.எஸ் மண்டபம், பண்டார் பாரு கோலா சிலாங்கூரில் நடைபெறும் இலவசச் சுகாதார பரிசோதனையில் பங்கேற்க அழைக்கிறது.

ஆரோக்கியமான சமூகம் என்ற திட்டம் தொற்றாத நோய் பரிசோதனை மற்றும் கோவிட்-19 பரிசோதனை ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

"பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் மற்றும் இலவச சுகாதாரப் பரிசோதனைகள் பொதுமக்களுக்கு நடத்தப்படும். ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கண்காட்சிகள் மற்றும் சுகாதார கல்வி நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன," என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புற்றுநோய் பரிசோதனை, ஆரம்பகால பக்கவாத அறி குறிகளைக் கண்டறிவதற்கான சோதனைகள், ஆலோசனை அமர்வுகள் மற்றும் B40 (PeKa B40) குழுக்கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் பதிவு ஆகியவை இடம்பெறும்.

அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனை (ஹாசா), டெக்னாலஜி மாரா பல்கலைகழகத்துடன் (யுஐடிஎம்) இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.