SELANGOR

மாநிலத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன

6 அக்டோபர் 2023, 5:04 AM
மாநிலத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன

ஷா ஆலம், அக் 6: பெரிய அளவிலான சாலை மேம்பாட்டு பணிகள் இதுவரை ஒன்பது மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி (கேஎஸ்எஸ்பி) தெரிவித்துள்ளது.

அப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில முழுமையடையாதப் பகுதிகள் உள்ளன. வானிலை உட்பட பல காரணிகளால் குறிப்பிட்ட இடங்களில் மேம்பாட்டு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

"மேம்படுத்தப்பட்ட சாலைகளில் ஜாலான் சுங்கை பூலோ, காப்பாரும் அடங்கும். இந்தப் பகுதியில் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்தியது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்" என்று சுஹைமி காலிடியைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இன்ஃப்ராசெல் மூலம் பராமரிக்கப்படும் சாலை மேம்பாடு திட்டமானது பெட்டாலிங்கில் (66), கோலா சிலாங்கூர் (11) மற்றும் உலு சிலாங்கூரில் (8) சாலைகளை உள்ளடக்கியது.

பயனர்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தின் சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக RM50 மில்லியன் ஒதுக்கீட்டில் ஒரு பெரிய அளவிலான திட்டம் மேற்கொள்ளப்பட்டது என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ட்விட்டர் அல்லது இன்ஃப்ராசெல் செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அதிக எண்ணிக்கையிலான புகார்களின் அடிப்படையில், பழுதுபார்க்கப்பட வேண்டிய சாலைகளைத் தேர்வு செய்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.