SELANGOR

மலிவு விற்பனை திட்டத்தில் டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கான பதிவு கவுண்டர்

5 அக்டோபர் 2023, 6:34 AM
மலிவு விற்பனை திட்டத்தில் டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கான பதிவு கவுண்டர்

கோம்பாக், அக் 5: நேற்று பத்து கேவ்ஸ் திடலில் நடைபெற்ற மலிவு விற்பனை திட்டத்தில் டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கான பதிவு கவுண்டரைப் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் திறந்திருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள சுங்கை துவா தொகுதியின் குடியிருப்பளர்கள் அழைக்கப்பட்டனர்.

மாநில அரசு வழங்கும் இலவசக் குடிநீர் திட்டம் குறித்து மேலும் விவரங்கள் விளக்க நீர் விநியோக நிறுவனத்தின் ஊழியர்கள் உதவினார்கள் என தொகுதியின் சேவை மைய மேலாளர் மைமன் மிஸ்மான் கூறினார்.

"வழக்கமாக சுங்கை துவா தொகுதியில் நடைபெறும் ஒவ்வொரு மலிவு விற்பனைத் திட்டத்திலும் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள். அதனை முன்னிட்டு ஆயர் சிலாங்கூர், டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கான பதிவு கவுண்டரைத் திறந்தது.

"ஆயர் சிலாங்கூர் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் மூலம் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பற்றி அறிந்து கொண்ட பிறகு, 60க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளனர்.

"எதிர்வரவிருக்கும் மலிவு விற்பனை திட்டத்தில் இதுபோன்ற கவுண்டர்களைத் திறக்க மாநிலத்தில் உள்ள பிற அரசு நிறுவனங்களையும் நான் அழைக்கிறேன். இதன் மூலம் பல திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மக்களை சென்றடையும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.