ஷா ஆலம், அக் 4: நாளை அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை
மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் மேலும் மூன்று
இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
லபோஹன் டகாங் பொது மண்டபம் (டெங்கில்), புக்கிட் கெராயோங் 1 எம்பிகேகே
பொது மண்டபம் (ஜெராம்) மற்றும் சமூக சேவை மையம் (சுங்கை ஆயர் தவார்) ஆகிய
இடங்களில் விற்பனை நடைபெறும்.
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850 இடங்களில் சிலாங்கூர்
விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS) நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச்
செயல்படுத்த சிலாங்கூர் RM40 மில்லியன் மானியம் செலவிட்டது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற
இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி
அறிந்து கொள்ளலாம்.








